Advertisement
*அன்பு தமிழ்ச் சொந்தங்களே!*உவகை தெளிக்க
உள்ளம் களிப்புற்று, தமிழால் உணர்வாய்
உயிராய் ஒன்றிணைந்து *தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின்*
*6ஆம் ஆண்டு விழாவில்* *கலந்து கொள்ள தமிழ்ச்* *சொந்தங்களே வருக* என
`ஒலி ஒலியாய்`ஆர்பரித்து
பெருமையுடனும் பேரன்புடனும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
நாள்: 22-12-2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 வரை
இடம்: சுந்தரய்ய விஞ்ஞான கேந்திர விழா அரங்கம்,
பாக் லிங்கம்பள்ளி, ஐதராபாத்-44
(சிக்கட்பல்லி மேட்ரோ ரயில் & அம்பேத்கர் கல்லூரி அருகில்)
*முக்கிய நிகழ்ச்சிகள்:*
○ தமிழ்ச் சங்க 6ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்
○ சிறப்பு விருந்தினர்கள் உரை
○ ஆண்டு மலர்-2024 வெளியீடு
○ நாட்காட்டி-2025 வெளியீடு
*○ கலைநிகழ்ச்சிகள்: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை வழங்கும் 40 கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் பரதநாட்டியம் & நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள்.*
○ நற்சான்றிதழ், விருதுகள் வழங்குதல் & பரிசளிப்பு
○ மற்றும் பல...
“விண்ணிடை இரதம் ஊர்ந்து
மேதினி கலக்கு தற்கும் பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப் பாரினை மயக்கு தற்கும் மண்ணிடை வாளையேந்திப்
பகைப்புலம் மாய்ப்ப தற்கும் எண்ணிலாத் தமிழர் உள்ளார் எனும்நிலை காண்ப தென்றோ?"
என்ற புரட்சிக்கவி பாரதிதாசனின் கனவை மெய்ப்பிக்கும் வகையில் தமிழர் தம் மரபை, கலைகளை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை தலைமுறைத் தாண்டி கடத்திடவும், தமிழின் இனிமையை கலை நிகழ்ச்சிகள் வழியாக புலம் பெயர்ந்தும் அனைவருக்கும் கொண்டு சேர்த்திடவும் நடந்திடும் நம் தமிழ்ச்சங்க விழாவில், கலந்து கொள்ளும் தமிழ் பெருமக்கள் அனைவரும் ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாருங்கள்!
நமது ஆண்டு விழாவின் கருப்பொருள் சமத்துவம் தமிழரின் தனித்துவம். பல்வேறு தமிழ் நெஞ்சங்கள் ஒன்றிணைந்து, உயிராய் உணர்வாய் தலைமுறைத் தாண்டியும் தமிழைக் கொண்டாடும் ஒரு மாபெரும் விழா இது, இப்பெருவிழாவிற்கு தமிழ்ச் சொந்தங்கள் யாவரையும் அன்போடு அழைக்கிறது தெலுங்கானா தமிழ்ச் சங்கம்.
அனைவரும் வருக!வருக! தமிழமுதம் பருக!
தமிழ் குடும்பங்கள் மற்றும் தமிழ் நண்பர்கள் அனைவரையும் சந்தித்து பேசி மகிழ ஓர் அறிய வாய்ப்பு.
தங்களது பகுதிகளில் உள்ள நம் தமிழ் உறவுகள் நண்பர்கள் அனைவரையும் நம் மாபெரும் நிகழ்வில் பங்கேற்க செய்து தமிழ்ச்சங்க உறுப்பினராக இணைக்க வேண்டுகிறோம்.
*குறிப்பு:* தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் புதிய உறுப்பினர்களாக இணையும் (அ) புதுப்பித்துக் கொள்ளும் உறுப்பினர்கள் அனைவருக்கும் 2025ம் ஆண்டுக்கான (விலையில்லா) தமிழ் நாட்காட்டி (காலண்டர்) ஆண்டு விழாவன்று வழங்கப்படும்.
தமிழால் இணைவோம்!
தமிழால் உயர்வோம்!!
அழைப்பின் மகிழ்வில்...
தெலுங்கானா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
தலைவர் எம்.கே. போஸ்: 92465 02855,
துணைத்தலைவர் ப. தர்மசீலன் : 98495 55470,
பொதுச்செயலாளர் சி. ராஜ்குமார் : 96522 34563,
பொருளாளர் நேரு : 9491382827
மின்னஞ்சல் : [email protected].
அலுவலக முகவரி: No. 1-9-49/b/4 Ramnagar Main Road,
Musheerabad, Hyderabad-500020,
Telangana.
(Landmark: Near Sowmya Hospital)
பதிவு அலுவலகம்:
No. 2-20-2/28/1/201,
Flat.No.201, Balaji Homes, Adarsh Nagar,
Road No.10, (Opp. HP Petrol Bunk) Uppal, Hyderabad,
Telangana–500039
Advertisement
Event Venue & Nearby Stays
Sundarayya Vignana Kendram - Baghlingampally, Hyderabad, India