Advertisement
அயோத்தியா மண்டபத்தில் மீண்டும் கோவை ஜெயராமன் மாமா பாடல்கள்சாஸ்தா என்றதும் பலருக்கு சபரிமலையில் உள்ள நித்திய பிரம்மச்சாரி ரூபம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் சாஸ்தா வழிபாடு என்பது உலகமெங்கும் நெடுங்காலமாக இருந்து வருகிறது. உதாரணதுக்கு அமெரிக்கா - கலிபோர்னியாவில் சாஸ்தா என்ற பெயர் கொண்ட மலை இருக்கிறது. சாஸ்தா வழிப்பாடு அங்கு இருந்தால் தான் அந்த மலைக்கு அந்த பெயர் வைத்திருக்க முடியும். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் சபரிமலை ஐயப்பன் ஆதி சாஸ்தா எடுத்த அவதாரங்களில் ஒன்று.
"எட்டு அவதாரங்கள் உண்டு எட்டு ஸ்வரூபம் உண்டு" என்ற புராதனமான பாடல் அடிப்படையில் எட்டு அவதாரங்களுக்கு ஒரே இடத்தில் கோவில் கட்ட முனைகிறோம். எல்லாம்வல்ல இறைவனின் கருணையினால் ஆதி சாஸ்தா, ஐயப்பன் மற்றும் விநாயகர் பிரதிஷ்டை 2018 ஆம் ஆண்டு நடந்து முடிந்தது. வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா கோவில் நல்ல முறையில் நடந்து வருகிறது. இன்னும் 18 படி பிரதிஷ்டை, 7 சந்நிதி பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.
வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா கோவிலுக்கு நிதி திரட்ட மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் 08-10-2022 மாலை 6.00 மணியளவில் பிரம்மஶ்ரீ கோவை ஜெயராமன் அறுளாசியுடன் அவரது மகன் திரு சுந்தர் ஜெயராமன் அவரது நாம சங்கீர்த்தனம் நடைபெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் இந்த ஒரு நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு ஐயப்பன் திருவருளை பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஐயப்ப பக்தர்கள் அனைவரும் திருப்பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
*நிகழ்ச்சி நிரல்*
*நாள்: 08-10-2022, சனிக்கிழமை, சுபகிருது வருடம் புரட்டாசி 21, சதுர்த்தசி
*இடம்: அயோத்தியா மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை
*காலை: அஸ்வாரூட சாஸ்தா (வீர சாஸ்தா) மற்றும் கால சாஸ்தா (மஹா சாஸ்தா) விசேஷ ஹோமம்
*மாலை: பாகவத சிரோன்மணி கோவை ஜெயராமன் அருளாசியுடன் ஶ்ரீ சுந்தர் ஜெயராமன் (மகன்) அவர்களது ஹரிஹரபுத்ர *நாம சங்கீர்த்தனம்*
*மாலை சிறப்பு விருந்தினர்:
*கலைமாமணி திரு டெல்லி கணேஷ்
*பஜன் சாம்ராட் ஶ்ரீ கடலூர் கோபி பாகவதர்
Advertisement
Event Venue & Nearby Stays
Sri Ram Samaj Ayodhya Mandapam, No 47, Arya Gowda Road, West Mambalam,Chennai, India